மண்ணை விட்டு மறைந்த நடிகர் விவேக்...! மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்திய இயற்கை ஆர்வலர்கள்...!

In order to pay homage to Vivek after his death, the organization 'Let's grow a tree to buy' has paid homage to Vivek by sprinkling flowers and saplings on his portrait in Thanakkankulam area.

‘மரம் வளர்ப்போம் வாங்க’ என்ற அமைப்பினர் விவேக்கின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மதுரை தனக்கன்குளம் பகுதியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்று காலை 4:30 மணி அளவில் மண்ணை விட்டு பிரிந்தார். இவருக்கு அரசியல் பிரபலங்களும், திரை உலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது பூதவுடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் நடிகர் விவேக்கின் அறிவுறுத்தலின்படி மரக்கன்றுகளை நட்டு, ‘மரம் வளர்ப்போம் வாங்க’ என்ற அமைப்பினர் விவேக்கின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மதுரை தனக்கன்குளம் பகுதியில் விவேக்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி, மரக்கன்றுகளை வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவர்களது இந்த செயல் பலரையும் நிகழ்ச்சி அடைய செய்துள்ளது. விவேக்கின் மறைவிற்கு அப்பகுதி பொதுமக்களும், சிறுவர்களும் அஞ்சல் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.