கூடுதல் கட்டணம்:பேட்ட, விஸ்வாசம் திரையரங்குகளில் ஆய்வு செய்ய குழு அமைப்பு- உயர்நீதிமன்ற மதுரை கிளை

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டிருக்கும் 22 திரையரங்குகளில், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரையரங்குக்கு 3 பேர் வீதம் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆணையர்கள் கொண்ட குழு நியமனம் செய்துள்ளது. இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை திரையரங்குகளில் இந்த குழு நேரில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.