வார நாட்களில் திங்கள் முதல் சனி வரை கூடுதல் ரயில் சேவை – தெற்கு ரயில்வே

Southern Railway has announced additional electric train service from Monday to Saturday on weekdays. An additional 160 services from the 4th

வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மின்சார ரயில் சேவை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் வார நாட்களில் கூடுதலாக மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. தற்போது சென்னையில் தினமும் 500 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 160 மின்சார ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 4-ஆம் தேதி முதல் கூடுதலாக 160 சர்வீஸ்இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி, வார நாட்களில் திங்கள்கிழமை முதல் சனி வரை கூடுதல் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.