அதிமுக பொதுக்குழு வழக்கை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் இபிஎஸ் தரப்பினர் நடத்திய அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று இவ்வழக்கு விசாரணையின்போது, அதிமுக பொதுக்குழு வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோன்று, தேர்தல் ஆணையம் தொடர்பாக எடப்பாடி தொடர்ந்த இடைக்கால மனுவை விசாரிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன்பின் இன்றைய அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து வழக்கு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்.