எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து அதிமுகவின் 3வது தலைமையாக இபிஎஸ்.. கே.பி.முனுசாமி பேட்டி!

இரு நிலைப்பாட்டுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி பேட்டி.

இரு நிலைப்பாட்டுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் முனுசாமி பேட்டி.

ஓசூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதாவைத் தொடர்ந்து அதிமுகவின் 3வது தலைமையாக இபிஎஸ் உருவாகி உள்ளார். 8 வழிச்சாலை விவகாரத்தில், மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டுடனும், முதல்வராக ஒரு நிலைப்பாட்டுடனும் இருக்கிறார் எனவும் குற்றச்சாட்டினார்.

இதனிடையே, கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக மத்தியில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளோம். கூட்டணி தர்மம் என்ற வகையில் பாஜகவை நாங்கள் விமர்சிக்கவில்லை.

அனைவரும் ஒன்று சேர்ந்து இணக்கமாகச் செயல்பட்டு ஒரே குறிக்கோளுடன் இந்தியாவை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதமராக மோடியை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்தார். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெறவில்லை எனக் குற்றம் சாட்டுவது தவறு எனவும் குறிப்பிட்டார். மேலும், சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார.