அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று ஈரோட்டில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அதிமுக மற்றும் திமுகவினர் ஈரோட்ட்டில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இரு கட்சிகளும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகிறது.
அந்தவகையில், காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் செஞ்சி மஸ்தான். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், அதிமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்கின்ற இயக்கம் திமுக எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசு இயந்திரம் முடக்கப்படவில்லை என பாஜகவின் வானதி சீனிவாசன் புகாருக்கு பதிலளித்தார். அரசு இயந்திரம் செயல்படவில்லை என்ற குற்றசாட்டு ஆதாரமற்றது, ஆதாரம் காட்ட முடியுமா எழுப்பியுள்ளார். எனவே, இதுபோன்று பரபரப்பான தேர்தல் களத்தில், மறுபக்கம், அனுமதியின்றி செயல்படும் தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஈடுபட்டு வருகிறார்.