அதிமுக வழக்கு – 2ம் நாள் விசாரணை தொடங்கியது!

ஓபிஎஸ் தரப்பில் நேற்று வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஐகோர்ட்டில் இரண்டாவது நாள் விசாரணை தொடங்கியது.

ஓபிஎஸ் தரப்பில் நேற்று வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஐகோர்ட்டில் இரண்டாவது நாள் விசாரணை தொடங்கியது.

அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் இரண்டாம் நாள் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் நேற்று ஐகோர்ட்டில் வாதங்கள் நடந்த நிலையில், இன்று 2ம் நாள் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன்வைத்து வைக்கிறார்.தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்த ஓபிஎஸ் மனுவை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் விசாரிக்கின்றனர். ஜூன் 23 பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு ஒப்புதல் கோரும் தீர்மானங்கள் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.