அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாத போது எப்படி நீக்க முடியும் என உச்சநீதிமன்றம் கேள்வி.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை ஐந்தாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகம், தலைமை செயலர் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் பன்னீர்செல்வம் தவறான தகவல்களை அளித்து வருகிறார் என அதிமுக அலுவலகம் வாதம் வைத்துள்ளது. ஜனநாயக அடிப்படையில் பலம் பொருந்திய கட்சியை செயல்பட விடாமல் தடுப்பதை ஏற்க முடியாது. கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் பொதுக்குழு கூட்டத்தையும் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது என்று அதிமுக தலைமையகம் கூறியுள்ளது.
இதன்பின், பன்னீர்செல்வத்தை நீக்க வேண்டும் என்பது அதிமுக பொதுக்குழு நிகழ்ச்சி நிரலில் இல்லாத போது அதனை எப்படி செய்தீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அதிமுக தலைமையகத்திற்கு உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. எனவே, இன்றைய தினம் அனைத்துதரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.