அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி காலமானார்.!

அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025