ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 48 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். இடைத்தேர்தலில் கிட்டத்தட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவது இறுதி என்றே கூறலாம்.
மறுபக்கம், அதிமுக வேட்பாளர் டெபாசிட்டை இழப்பாரா என கேள்விகள் எழுந்தது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 28,637 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக. டெபாசிட் பெற 28,365 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் அதைவிட அதிகம் பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. இருப்பினும், சொந்த வார்டிலேயே காங்கிரஸ் வேட்பாளரை விட 271 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார் தென்னரசு.
அதாவது, தனது சொந்த வார்டான சொக்காய் தோட்டத்தில் 192 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு. திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 463 வாக்குகள் பெற்றுள்ளார்.