கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டி – நாளை பாஜக ஆலோசனை!

கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில், கூட்டணி குறித்து பாஜக நாளை ஆலோசனை என தகவல்.

கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில், கூட்டணி குறித்து பாஜக நாளை ஆலோசனை என தகவல்.

கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவி வரும் நிலையில், கர்நாடகா தேர்தல் 2 முதல் 3 இடங்களில் தமிழர்கள் அதிகமுள்ள இடங்களில் அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், இதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

வேட்பாளர் அறிவிப்பு:

இந்த சமயத்தில், அதிமுக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, மே 10 அன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், பெங்களூரு அருகே உள்ள புலிகேசி நகர் (159) சட்டமன்றத் தொகுதியில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுகிறார் என இபிஎஸ் அறிவித்திருந்தார்.

பாஜகவை எதிர்த்து போட்டி:

இது பாஜக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் மோதலாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாஜக – அதிமுக கூட்டணி விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த சமயத்தில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறதா என கேள்வி எழுந்தது. அதுமட்டுமில்லாமல், பாஜக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாக தகவல் வெளியான நிலையில், வேட்பாளரை அறிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

பாஜக ஆலோசனை:

இந்த நிலையில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நாளை மைய குழு கூட்டம் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் அதிமுக தனித்து போட்டியிடும் நிலையில், கூட்டணி குறித்து பாஜக ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கார்நாடகா சட்டஎப்ராவை தேர்தல், தமிழகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.