முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு.
தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சரின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். சாலிகிராமம் பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டினார்.
அதிமுக ஆட்சியில் நடந்த சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பேரவையில் முதலமைச்சர் பதிலளித்து வந்த நிலையில், முதலமைச்சரின் பதிலை ஏற்க மறுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பெண் காவலர் பாலியல் தொல்லைக்கு ஆளான பிரச்சனையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் இபிஎஸ் குற்றசாட்டியுள்ளார்.