சபாநாயகருடன் அதிமுக கொறடா சந்திப்பு!

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி சந்தித்து பேச்சு.

சபாநாயகர் அப்பாவுவை அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி சந்தித்து பேச்சு.

சென்னையில் சபாநாயகர் அப்பாவு உடன் அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம், இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்தித்து பேசி வருகிகின்றனர்.

எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளனர். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என உயநீதிமன்ற தனி நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில்,  எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.