சென்னையில் விமான சேவை காலை 9 மணி முதல் துவங்கும்!

With the opening of the Chennai airport, passengers are flocking to cities like Delhi, Andaman and Ahmedabad.

சென்னை விமான நிலையம் செயல்பட துவங்கியுள்ள நிலையில், டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30  மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை கரையை கடந்துள்ளது. அதி தீவிர புயலாக இருந்த புயல் தீவிர புயலாக மாறி கரையை கடந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்தில் நிவர் புயலாக கரையை கடக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், நிவர் புயல் எதிரொலியால் நேற்று விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், சென்னையில் விமான சேவை இன்று காலை 9 மணி முதல் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையம் செயல்பட துவங்கியுள்ள நிலையில், டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.