சென்னை ரோகினி தியேட்டரில் துணிவு படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர் பரத்குமார் (19) ஓடும் லாரியில் ஏறி நடனமாடிய போது கீழே விழுந்து உயிரிழப்பு.
8 வருடங்களுக்கு பின் அஜித் மற்றும் விஜயின் திரைப்படங்கள் இன்று ஒரே நாளில் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படமும் இன்று வெளியானது.
இந்த நிலையில், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் படத்தை கண்டுகளித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ரோகினி தியேட்டரில் துணிவு படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர் பரத்குமார் (19) ஓடும் லாரியில் ஏறி நடனமாடிய போது கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து படுகாயமடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.