#Alert:தமிழகத்தில் கனமழை;எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?- வானிலை மையம் அறிவிப்பு!

தமிழக பகுதிகளின் மேல் நிலவவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகின்ற 18-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை  ஆய்வு மையம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகின்ற 18-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி,தமிழகத்தில் நீலகிரி,கோயம்பத்தூர்,திண்டுக்கல்,தேனி,திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,புதுவை,காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதே சமயம்,இன்று லட்சத்தீவு மற்றும் கேரளாவை ஒட்டிய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

unknown node