#Alert:இன்று முதல் 4 நாட்கள் மழை;இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் கூறியுள்ளது.

அதே சமயம்,சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும்,லட்ச்சதீவு பகுதி,தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி,கேரளா கடலோரப்பகுதி மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

unknown node