#Alert:60 கி.மீ வேகத்தில் சூறாவளி;இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி,

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,தமிழகத்தில் இன்று நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,கிருஷ்ணகிரி,தருமபுரி,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

unknown node

மேலும்,இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

unknown node

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

unknown node

மேலும்,தமிழக கடலோரப் பகுதிகள்,மன்னார் வளைகுடா,குமரிக்கடல் பகுதி,இலட்சத்தீவு பகுதி மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்,கேரளா – கர்நாடக கடலோரப் பகுதிகள், மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

unknown node