#Alert:இன்று முதல் 4 நாட்களுக்கு மழை;மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக,இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய

மேற்குதிசை காற்று வேக மாறுபாடு காரணமாக,இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை:

unknown node

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்,நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

unknown node

மேலும்,குமரிக்கடல் பகுதி,இலட்சத்தீவு பகுதி,மன்னார் வளைகுடா,தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதி,கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள்,தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

unknown node