சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின், முதல் தேசிய மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின், முதல் தேசிய மாநாடு, டெல்லியில் உள்ள கஸ்தூர்பா காந்திமார்க், கன்னாட் பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் அசோக் கெலாட், தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்கு தலைமையேற்று காணொளி வாயிலாக உரையாற்றுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும், முதல் தேசிய மாநாட்டில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக கலந்து கொள்ள உள்ளார்கள். சமூக நீதியை தேசிய அளவில் முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது.