திமுக சார்பில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்..

சென்னையில் திமுக சார்பில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக சார்பில் வரும் 22 ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மு.க ஸ்டாலின் தலைமையில், வரும் செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தோழமைக் கட்சி தலைவர்கள் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.