அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

Equality People's Party leader Sarath Kumar said a decision on the constituency would be taken after the talks.

பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்குமுன்பு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றி பேசிய சரத்குமார், அதிமுக கூட்டணியில் ஒன்று, இரண்டு தொகுதிகள் ஒதுக்கினால் போட்டியிட மாட்டோம்.

மேலும், கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பெறுவோம். தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம். மூன்றாவது கூட்டணி அமைந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் தயாராக உள்ளோம். தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க தனி குழு ஒன்றை அமைத்துள்ளோம். தேர்தலை யொட்டி தமிழகத்தில் 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.