அதிமுக – பாஜக இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி.
அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகல்:
unknown nodeபாஜகவில் இருந்து அடுத்தடுத்த நிர்வாகிகள் விலகி அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனால் பாஜக தொண்டர்களிடையே ஏற்படுத்தியது. தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்மல் குமார், தில்லி கண்ணன் பாஜகவில் இருந்து விலகி அதிகுமாவின் இணைந்தனர். இதன்பின், சென்னை மேற்கு மாவட்ட ஐடி விங் தலைவர் உள்ளிட்ட 13 நிர்வாகிகள் விலகுவதாக பரபரப்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டிருந்தனர்.
பாஜக கண்டனம்:
unknown nodeபாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் இணைத்ததற்கு கண்டங்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வந்தனர். பாஜகவினரை திராவிட கட்சிகள் இழுக்கிறது என்றும் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவன் என அவர்களை ஒப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியது பேசும் பொருளாக மாறியுள்ளது. அண்ணாமலையின் பேச்சிக்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
உருவப்படம் எரிப்பு:
unknown nodeஇதனிடையே, எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணி சேர்ந்தவர்கள் எரித்தது மேலும் இரு கட்சிகள் இடையே பரபரப்பை உண்டாக்கியது. இரு கட்சிகளும் மாறி, மாறி விமர்சித்து மோதிக்கொண்டனர். அதிமுக – பாஜக கூட்டணி நீடிக்குமா? என கேள்வி எழுந்தது. அதிமுக – பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று சென்னை அதிமுக தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
பாஜக – அதிமுக இடையே மோதல் இல்லை:
unknown nodeஇந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜக – அதிமுக இடையே மோதல் இல்லை என்றும் பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. மாநில அளவில் அதிமுக தலைமையிலான கூட்டணி என்றும் தேசிய அளவில் தேசிய கட்சி தலைமையில் கூட்டணி எனவும் கூறிய அவர், இபிஎஸ் படத்தை பாஜகவினர் எரித்தது ஏற்கமுடியாதது எனவும் தெரிவித்திருந்தார்.
கூட்டணி தொடர்கிறது:
unknown nodeஇந்த நிலையில், இன்று சிவகங்கையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், அதிமுக – பாஜக இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை, பாஜகவுடனான கூட்டணி தொடர்கிறது. தேசிய கட்சியிலிருந்து மாநில கட்சிக்கு வருவதும், மாநில கட்சியிலிருந்து தேசிய கட்சிக்கு செல்வதும் சலசலப்பல்ல. கட்சி மாறுவது குறித்து ஊடகங்களே பெரிதாக்குகிறது என்றார்.