யாருடன் கூட்டணி? அதிமுக தான் முடிவு செய்யும் – ஓ.எஸ்.மணியன்

தமிழ்நாட்டில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.

தமிழ்நாட்டில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி.

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவை அதிமுகத்தான் எடுக்கும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.எஸ்.மணியன்,யாருடன் கூட்டணி? யாருக்கு எத்தனை சீட் வழங்க வேண்டும்? என்பதை அதிமுகவே தீர்மானிக்கும். எனவே, தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என்றார்.

அதிமுக உடனான கூட்டணியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்த்ததாக தகவல் வெளியான நிலையில், ஓ.எஸ்.மணியன் இவ்வாறு தெரிவித்துள்ளார். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் தெரிவித்தாக தகவல் வெளியாகியிருந்தது.