கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற உத்தரவு.
கஜா புயலையடுத்து அரசு அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து நாகையில் கடலோர பகுதியில் குடியிருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்ற டிஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் கோடியக்கரை பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாமென தஞ்சை சரக டிஐஜி லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.