அம்பேத்கர் சிலை சேதம் – 6 பேரை கைது செய்த போலீசார்..!

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய 6 பேர்  கைது செய்யப்பட்ட நிலையில்,  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய 6 பேர்  கைது செய்யப்பட்ட நிலையில்,  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

இதனையடுத்து, சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.