அமமுக சார்பில் மார்ச் 3-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் பெற தேதியை அனைத்து கட்சிகளும் அறிவித்து வரும் நிலையில், அமமுக சார்பில் விருப்ப மனு பெற தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற மார்ச் 3-ஆம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 10-ஆம் தேதி புதன்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கீழே குறிப்பிட்டுள்ளபடி விருப்பமனு கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் முழுமையாக பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை ரூ.10,000, புதுச்சேரியில் விருப்ப மனுவிற்கான கட்டணத்தொகை ரூ.5,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…