நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்
நெல்லையில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பற்கள் பிடுங்கப்பட்டதாக நபர் அளித்துள்ள பேட்டியில், தான் காவல்துறையால் தாக்கப்படவில்லை என்றும், கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக இந்த சமபவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டப்பேரவையில் அம்பாசமுத்திரம் அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். ஏஎஸ்பி பலவீர் சிங் மீது நடவடிக்கை எடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றிலனாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அதில், சம்பத்தப்பட்ட ஏஎஸ்பி பலவீர் சிங் குற்றசெயலில் ஈடுபட்டதாக சிலரை விசாரணைக்கு அழைத்து பல்லை பிடுங்கியது ஏற்கக்கூடிய செயல் அல்ல.
அவர் மீது ஆட்சியர் தலைமையில் விசாரணை தொடங்கப்பட்டு அவர் காத்திருப்போர் பட்டியலிலுக்கு மாற்றப்பட்டார். புகார் அளித்த உடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் தற்போது அளித்துள்ள விளக்கம் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.