பெண்ணிற்கு பாலியல் தொல்லை ! புகாரால் சிக்கிய ஆன்லைன் கும்பல்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி சேர்ந்தவர் 38 வயது பெண் இவருக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் மேலும் இவருக்கு 17 வயதுடைய மகன் மற்றும் 15 வயதுள்ள ஒரு மகளும் உள்ளனர் , இந்த நிலையில் இவரை சகாபுதீன் என்பவர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார் .
மேலும் இருவர் தனிமையில் இருந்ததை சகாபுதீன் உட்பட மூன்று பேர் வீடியோக்கள் எடுத்து வைத்துள்ளனர், மேலும் பல பெண்களுடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி தனிமையில் இருந்தது அந்த பெண்ணிற்கு தெரியவந்தது அந்தப் பெண்ணும் அவரை விட்டுப் பிரிந்துள்ளார் , இதனைத் தொடர்ந்து அப்பெண்ணுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை வைத்துக் கொண்டு சகாபுதீன் உட்பட சிலர் மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்த பெண் புகார் அளித்துள்ளார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் கண்காணிப்பாளரிடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் காரணமாக காவல்துறையினர் விசாரணை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது, பாதுஷா மற்றும் சகோதரர் ஷாஜி ஆகியோர் ஆன்லைன் சேவை மையத்தில் செல்போனுக்கு ரீ-சார்ஜ் செய்ய வரும் வாடிக்கையாளர்களில் சிலரின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறிப்பது தெரியவந்தது மேலும் இவர்கள் அனைவரும் சேர்ந்து வெளிநாட்டில் வசிக்கும் அவரது நண்பர் ஆலிம்மிற்கு புகைப்படங்களை அனுப்புவார், அவர் ஏர்வாடியில் உள்ள சில பேருக்கு வாட்ஸாப் மூலம் அனுப்புவார்.
இந்த நிலையில் அந்த கடையில் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் பாதுஷா மற்றும் சகாபுதீன் இருவரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025