கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!
2026 சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு, விஜய்யை முதல்வராக அமர வைப்போம் என உறுதி ஏற்போம் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசியுள்ளார்.

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர்.
அதனை தொடர்ந்து, இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, செல்லும் வழி முழுக்க, திறந்த வாகனத்தில் விஜய் தொண்டர்களை சந்தித்தபடியே தவெக கருத்தரங்கிற்கு வருகை தந்தார் தலைவர் விஜய்.
மேலும், கரூர், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட தவெக முகவர்கள் இன்றைய கருத்தரங்கில் பங்கேற்றனர். முதலில் மேடையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பேசுகையில், ” தவெக முகவர்கள் கருத்தரங்குக்கு யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை. மாநாட்டின்போதும் சரி, இப்போதும் சரி, யாருக்கும் பணம் தரவில்லை.
2026 சட்டமன்ற தேர்தல் தான் நம் இலக்கு, விஜய்யை முதல்வராக அமர வைப்போம் என உறுதி ஏற்போம். கருத்தரங்கில் கட்டமைப்பு இல்லை என ஊடக விவாதங்களில் பேசுகிறார்கள். நாங்க எல்லாத்துக்கும் ரெடி, அவரை கூப்பிட்டு வந்து போறது தான் கஷ்டம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தவெக தலைவர் விஜய்க்கு ஓட்டு உள்ளது, அதை மறுக்க முடியாது. யாருக்கும் பயப்பட வேண்டாம், நம்முடைய உயிர், மூச்சு எல்லாம் விஜய்க்கு தான். மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும் என்று தவெகவினருக்கு ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.