பிரதமர் மோடி நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கவில்லை!

சென்னை வந்துள்ள பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை.

சென்னை வந்துள்ள பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை.

சென்னை வந்துள்ள பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. இதன் பின், இன்னும் சற்று நேரத்தில் சென்ட்ரல் ரயில்வே நிலையில் இருந்து சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதாமாருடன், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல் முருகன், சிந்தியா உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், சென்னை வந்துள்ள பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை. கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் இறுதிப் பட்டியல் தேர்வு நடைபெற்று வருவதால், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.