விவரம் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார் – நாராயணசாமி

சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு நாளாகும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து.

சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு நாளாகும் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கருத்து.

தமிழ்நாடு சட்டப்பேரவை குறித்து விவரம் தெரியாமல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருவதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையை விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு தகுதி இல்லை. சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்து கொண்ட விதம் தமிழ்நாட்டிற்கு கருப்பு நாளாகும் என்றும் ஆளுநர் ரவி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.