அண்ணாமலை பல்கலைக்கழகம் விவகாரம் – அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை கண்காணிக்க கோரி புதுச்சேரியை சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விதிகளை பின்பற்றாமல் ஆசிரியர்கள், அலுவலர்கள் நியமன செய்யப்பட்டுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறையும் நிலையில், இதர பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மனுவில் கூறியுள்ளார். எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.