BREAKING:தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் ஒருவர் குணமடைந்தார்.!

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் 23 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு

தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் 23 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குணமடைந்த நிலையில் தற்போது டெல்லி சார்ந்த ஒருவர் குணமடைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

unknown node

டெல்லி சார்ந்த இந்த நபர் தமிழகத்தில் கொரோனா வைரசால்   பாதிக்கப்பட்ட  இரண்டாவது நபர் ஆவர்.  இவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமடைந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களில் டெல்லி சேர்ந்த இந்த  நபர் டிஸ்சர்ஜ் செய்யப்படுவதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.இந்த நபர் வேலை தேடி சென்னைக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.