வன்னியர் சங்கத்தை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் முறையீடு..!

Warahi also demanded that the Vanniyar Sangam be banned and that a case be registered against Ramdas and Anbumani for calling for the protest.

வன்னியருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 4 நாள்கள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, பல மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பாமகவினர் போராட்டத்தில்கலந்துகொள்ள சென்னை நோக்கி வந்தனர். இதைத்தொடர்ந்து, போலீசார் சென்னை பெருங்களத்தூரில் இந்த போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர மற்ற பாமக உறுப்பினர்களை நகருக்குள் அனுமதிக்கவில்லை.

அப்போது பாமகவினர் சிலர் அருகில் இருந்த ரயில் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். மேலும்,  தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்தனர். இந்நிலையில், பாமக நடத்திய போராட்டத்தின் போது பொது மக்களுக்கு இடையூறு, பொது சொத்துக்களை சேதம் விளைவித்ததாக பத்திரிக்கையாளர் வாராஹி சென்னை உயர்நீதி மன்றத்தில் முறையிட்டுள்ளார். மேலும், போராட்டம் நடத்திய வன்னியர் சங்கத்தை தடை செய்யவும், போராட்டத்திற்கு அழைப்புவிடுத்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வாராஹி கோரிக்கையும் வைத்தார்.

இதைத்தொடர்ந்து, முறையீட்டை மனு தாக்கல் செய்தால் எந்த அமர்வு விசாரிக்கும் என்பதை பதிவுத்துறை முடிவெடுக்கும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.