மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, ஆப்பிள் நிறுவனம், தனது ஐ போன் 11 மாடலை சென்னையில் உள்ள தனது பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தாயாரிக்கவுள்ளது.
இந்தியாவில் “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ், பல நிறுவங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் ஒரு பங்காக, உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தனது குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் தாயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஃபாக்ஸ்கான் ஆலையை விரிவுபடுத்த 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ததாக தகவல் வெளியானது.
அதன்படி, தனது ஐ போன் 11 ரக மாடலை சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர், மேக் இன் இந்தியா திட்டத்திற்கு இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஊக்கம் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் அதில், ஆப்பிள் இந்தியாவில் ஐபோன் 11 ஐ தயாரிக்கத் தொடங்கியுள்ளது எனவும், இந்தியாவில் முதல் முறையாக ஒரு சிறந்த மாடலை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம், தனது XR மாடலை இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு தயாரிக்க தொடங்கியது. பெங்களூர் ஆலையில் ஆப்பிள் ஐபோன் SE மாடலை கடந்த 2017-ம் ஆண்டில் தயாரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பெங்களூருக்கு அருகிலுள்ள தனது விஸ்ட்ரான் ஆலையில், ஐபோன் SE 2020 மாடலை இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…