இந்தியா முழுவதும் படித்த மாணவ-மாணவிகள் , பட்டதாரி இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வங்கித்தேர்வுகள் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் IBPS என்ற அரசு வங்கி அமைப்பு தனது வங்கிக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று வருகிறது.மேலும் லட்சுமி விலாஸ் வங்கியும் ஊழியர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்களை வரவேற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இரண்டு வங்கிகளும் தேர்வை வரும் 20 ந் தேதி நடத்தும் என்று தற்போது அறிவித்துள்ளது. இதனால் பட்டதாரி இளைஞர்கள் ஒரு வங்கியின் தேர்வை மட்டுமே எழுத முடியும் என்று கவலை தெரிவித்துயுள்ளனர்.
எனவே ஒரே நாளில் இரண்டு வங்கி தேர்வுகள் நடைபெறவதால் இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.