பி.இ., பி.டெக் – முதலாமாண்டு சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடு.

engineering Counselling

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடு.

பி.இ., பி.டெக் மற்றும் பி.ஆர்க் பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க் முதலாமாண்டு சேர்க்கைக்கு அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேர நாளை முதல் ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:https://www.tneaonline.org or https://www.tndte.gov.in என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TEA Faction Centere (TRC) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் நாளைய முதல் ஜூன் 4 வரை ஆகும்.

பதிவுக் கட்டணம்:பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / UPI இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், “The Secretary TNEA” peyabie at Chennai. என்ற பெயரில் 05.05.2023 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம். அதன்படி, ஓசி, எம்பிசி,பிசி, பிசிஎம் உள்ளிட்ட பிரிவுகளுக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ,250 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணைதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node