தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் செலவின பார்வையாளராக ஐஆர்எஸ் அதிகாரி கெளதம் குமார் நியமனம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் செலவின பார்வையாளராக ஐஆர்எஸ் அதிகாரி கெளதம் குமார் நியமனம்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் தேர்தல் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. இடைத்தேர்தலுக்கு பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. அதன்படி, இடைத்தேர்தல் வாக்குசாவடிகளில் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி ஈரோட்டில் இன்று தொடங்கியது.

ஈரோடு ரங்கம்பாளையம் தனியார் கல்லூரியில் நடைபெறும் பயிற்சியில் 1206 பேர் பங்கேற்றுள்ளனர். இ.வி.எம் இயந்திரத்தை கையாளுதல், வாக்குச்சாவடியில் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து பயிற்சி அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கிய நிலையில் நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இதனிடையே,  இடைத்தேர்தலுக்கு பொதுப்பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் மற்றும் காவல் பார்வையாளராக மேற்கு வங்கத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் சதிவேவ் ஆகியோ நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் செலவின பார்வையாளராக ஐஆர்எஸ் அதிகாரி கெளதம் குமார் நியமனம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.