காவலர்களுக்கு பணி நியமன ஆணை.. மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்!

இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

Chief minister MK Stalin

இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் 3,271 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். ரூ.36.39 கோடியில் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருப்பத்தூர் மாவட்டங்களில் காவல் அலுவலக கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் காவல் அலுவலக கட்டடங்களை காணொளி மூலம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், தூத்துக்குடி, தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களுக்கு காணொலியில் முதல்வர் அடிக்கல் நாட்டினார். இதுபோன்று, புது துணை மின் நிலையம், திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்தார்.