மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்பது குறித்து ஈரோடு கிழக்கு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், இன்று இறுதி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக, திமுக என பிரதான கட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இறுதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். நிதிநிலை சரியாக இருந்திருந்தால் பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்கும் என்றும் நிதிநிலை சரியாக இல்லாததால் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். மேலும், மகளிர் உரிமைத்தொகை குறித்து நீங்களே மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.