அரிக்கொம்பன் யானைக்கு உடல்நலம் பாதிப்பு..! தொடர்ந்து கண்காணிக்கும் வனத்துறை..!

While Arikomban elephant is in Kotaiyar forest area, the elephant's health has been affected.

arikompan

அரிக்கொம்பன் யானை கோதையாறு வனப்பகுதியில்  உள்ள நிலையில், யானைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிக்கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் தமிழக எல்லையில் விட்ட நிலையில், இந்த யானை தேனி, கம்பம் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்தது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் உயிரிழந்தார்.

இதனை அடுத்து, யானையை பிடிக்க வனத்துறையினர் கடுமையாக போராடி, இறுதியாக மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இந்நிலையில், பிடிப்பட்ட அரிக்கொம்பன் யானை நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் வனத்துறையினால் விடப்பட்டது.

தற்போது இந்த அரிக்கொம்பன் யானை கோதையாறு வனப்பகுதியில்  உள்ள நிலையில், யானைக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சரியான உணவு உட்கொள்ளாததால் அரிக்கொம்பனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யானை விடப்பட்ட இடத்தைவிட்டு வேறு எங்கும் செல்லாமல் அங்கேயே சுற்றி வரும் நிலையில், ஏற்கனவே அங்குள்ள யானைக்கூட்டத்துடன் சேராமல் தனியாக வலம் வருகிறது. அரிக்கொம்பன் யானை ஊருக்குள் வராத வகையில் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஈடுபட்டுள்ளது.