இந்த விவகாரங்களில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்க கூடாது – டிஜிபி

போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை.

போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை.

மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரைகள் வழங்கியுள்ளார். அதன்படி,

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்களில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக, கு.வி.மு.ச பிரிவு 41 (4) ன் படி சம்மன் அனுப்பி எதிரிகளை எதிர் மனுதாரரை விசாரணை செய்யலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்படவேண்டும்.

முக்கிய வழக்குகளில், இறுதி அறிக்கையினை (குற்றப்பத்திரிக்கை)உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும், அதுவும் குறிப்பாக மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் வழக்கு கோப்பினை தீவிர ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

unknown node