ஆருத்ரா நிதி நிறுவன மோசடி – மேலும் 2 பேர் கைது ..!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தது.

பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

unknown node

இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி உள்ளிட்ட சிலரை கைது செய்த நிலையில், இந்த விவகாரத்தில் நடிங்கர் ஆர்.கே.சுரேஷிற்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, ஆர்.கே.சுரேஷின் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்காக சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால், போலீசார் நோட்டீஸ்  அனுப்பி இருந்தனர். இதற்கிடையில்,  மோசடி வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க, பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசிஅம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இருவர் கைது

இந்த நிலையில்,ஆருத்ராநிதி நிறுவன பண மோசடி வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், செந்தாமரை, சந்திர கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தது.