ஆருத்ரா மோசடி – நடிகர் ஆர்.கே சுரேஷ்க்கு போலீசார் நோட்டீஸ்..!

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷ்க்கு போலீசார் நோட்டீஸ்

ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷ்க்கு போலீசார் நோட்டீஸ்

பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிசை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆருத்ரா மோசடி வழக்கில் ஏற்கனேவே 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு

இந்த விவகாரத்தில் மேலும் சிலர்  செய்யப்பட்டுள்ள நிலையில், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு உள்ளதாக பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் நோட்டீஸ்

இந்த நிலையில்,  ஆர்.கே.சுரேஷின் வீட்டிற்கு போலீசார் விசாரணைக்காக சென்ற போது அவர் வீட்டில் இல்லாததால், போலீசார் நோட்டீஸ்  அனுப்பியுள்ளனர்.