'இ-பதிவில்' திருமணத்திற்கான அனுமதி நீக்கம்...!

As 'E-registration' has become mandatory in Tamil Nadu from today, but permission for marriage has now been revoked.

தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,இன்று முதல் திருமணம்,முக்கிய உறவினரின் இறப்பு,வேலைவாய்ப்பு,மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்,பிற மாவட்டத்திற்கு வெளியே பயணம் செய்யவும் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேலும்,வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வருவதற்கும் ‘இ-பதிவு’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி,இன்ற முதல் http:/eregister.tnega.org என்ற  இணையதளத்தில் பயண விவரங்களை கொடுத்து ‘இ-பதிவு’ செய்து கொள்ளலாம்.

இந்நிலையில்,’இ-பதிவு’ விண்ணப்பிக்கும் இணையதளத்தில் இருந்து இன்று திருமணத்திற்கான பிரிவு நீக்கப்பட்டுள்ளது.

மேலும்,இதுகுறித்து தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில்,திருமணம் என்ற பிரிவை பலர் தவறாகப் பயன்படுத்தி வெளியே சுற்றுகின்றனர்.இதனால்,அதிக அளவில் மக்கள் வெளியே வருவதால் கொரோனா மேலும் பரவ வாய்ப்புள்ளது.எனவேதான்,திருமணம் என்ற பிரிவை ‘இ-பதிவு’ இணையதளத்திலிருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்தது.