ஆசிரம விவகாரம் – 8 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்!

விழுப்புரம் ஆசிரம பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 8 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்.

விழுப்புரம் ஆசிரம பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 8 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்.

சிபிசிஐடி காவல்:

unknown node

விழுப்புரம் ஆசிரம பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைதான 8 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. கைதான 8 பேரையும் 3 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் நீதிபதி புஷ்பராணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை:

unknown node

அன்பு ஜோதி இல்லத்தில் மனநல பாதிக்கப்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம்பெண்களுக்கு போதைப்பொருள் தந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,  குண்டலபுலியூர் உள்ள அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்:

unknown node

அதன்படி, ஆசிரம நிர்வாகி ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆசிரம பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகி ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின் உள்ளிட்ட 8 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், கைதான 8 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல் விதித்து, 8 பேரையும் பிப்.28ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.