மதுபோதையில் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கொடூரமான முறையில் கொலை…!!

குடித்துவிட்டு தகராறு செய்து அவரை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலு என்பவர் தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் மீது லாரி ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வாழவல்லான் அருகே குடித்துவிட்டு தகராறு ஈடுபட்ட முருக வேலை அதிகாரி பாலு மதுபோதையில் ஏன் சுற்றி திரிகிறாய் என தட்டி கேட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இவர் சரக்கு லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. 54 வயதான இவரை லாரி ஏற்றி கொலை செய்த முருக வேல் என்பவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். முருகா வேலை கைது செய்ய 10 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார் கூறுகையில், குற்றவாளி முருகவேள் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு தகராறு செய்து அவரை தட்டிக் கேட்ட உதவி ஆய்வாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025