ஏடிஎம் கொள்ளையர்களுக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல் விதிப்பு!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை மார்ச் 3 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை மார்ச் 3 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.

திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த 2 பேருக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான ஹரியானாவில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிப், அவனது கூட்டாளி ஆசாத்துக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவின்பேரில் 2 பேரும் வேலூர் சிறைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

unknown node

இருவரையும் 15 நாள் சிறையில் அடைக்க திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இருவரையும் காவலில் எடுத்து கொள்ளை விவகாரத்தில் கூட்டாளிகள் குறித்து விசாரணை நடத்த தனிப்படை போலீஸ் திட்டமிட்டுள்ளனர். திருவண்ணாமலையில் பிப்.11 தேதி நள்ளிரவில் 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து, ரூ.73 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. இதில், 3 லட்சம் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய பணம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.