யானை மீது டயரில் தீக்கொளுத்தி வீசிய இரண்டு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மூன்று மாத காலமாக முதுகில் காயத்துடன் சுற்றித்திரிந்து ஜனவரி 19-ல் உயிரிழந்த யானையின் மீது தீ கொளுத்தப்பட்ட டயரை வீசும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியிடுபட்டுள்ளது. இந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது பலருக்கும் மிகுந்த வேதனையை தருகிறது.
இதனையடுத்து, இந்த கொடூர செயலை செய்த, நீலகிரி மாவநல்லா பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்ததாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். டயரில் தீ வைத்து யானையின் மீது வீசிய சம்பவத்தில் ரிசார்ட் உரிமையாளர் ரைமன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
unknown node